ஆசிரியர் நியமனம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்
நெல்லையில் கிருஷ்ணசாமி பேட்டி
நெல்லை, ஜூன் 11:
புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:
சமூக ஒடுக்குமுறைக்கு ஆளான 76 சமுதாய மக்களே தாழ்த்தப்பட்ட பிரிவைசார்ந்தவர்கள் ஆவர். எஸ்சி என்பது எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையும் குறிக்காது. 76 ஜாதிகளின் உட்பிரிவைஇந்திய அரசு �சமூக நீதித்துறை� என்ற ஒரு குறிப்பிட்ட துறையின் கீழ் கண்காணித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் 76 ஜாதிகளின் உட்பிரிவுகளை கண்காணிக்கும் துறையை �ஆதிதிராவிடர் நலத்துறை� என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். பல ஜாதிகள் அடங்கிய எஸ்.சி. பிரிவுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரால் நலத்துறை இருப்பது கூடாது.எஸ்.சி பிரிவினருக்கு மத்திய அரசு 18% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதில் அருந்ததியர்களுக்கு 3% உள்ஒதுக்கீடு என்பது மாநில அரசின் வரம்பு மீறிய செயலாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இதில் தொடர்ந்து இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழகஅரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment