அரசு கலை கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: போலியான அனுபவ சான்றிதழ் சமர்ப்பித்தால் கிரிமினல் நடவடிக்கை ஆசிரியர் தேர்வுவாரியம் எச்சரிக்கை
அரசு கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்திற்கு போலியான அனுபவ சான்றிதழை சமர்ப்பித்தால் விண்ணப்பதாரர் மீதும், அந்த சான்றிதழை வழங்கிய கல்வி அதிகாரி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்தேர்வு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது
1,093 காலி இடங்கள்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தின்போது பின்பற்றப்படும் எழுத்துத்தேர்வும் இல்லாமல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பும் இல்லாமல், புதிய முறையில் இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப இருக்கிறது.
பணி அனுபவம், உயர்கல்வித்தகுதி, ஸ்லெட், நெட் தேர்ச்சி, நேர்முகத்தேர்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்ணும், நேர்முகத்தேர்வுக்கு 9 மதிப்பெண்ணும், பி.எச்டி. கல்வித்தகுதிக்கு 9 மார்க்கும், ஸ்லெட், நெட் தேர்ச்சிக்கு 5மதிப்பெண்ணும், அதோடு கூடவே எம்.பில். இருந்தால் அதற்கு 6 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
34 மதிப்பெண்
மொத்தம் உள்ள 34 மதிப்பெண்ணில் அதிகபட்சமார்க், பணி அனுபவத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 7½ ஆண்டுகளுக்கு 15 மதிப்பெண். எனவே, உதவி பேராசிரியர் நியமனத்தில், பணி அனுபவம் முக்கிய இடம் பெற்றிருக்கும். இன்னும் சொல்லப்போனால், வேலை கிடைப்பதை 90 சதவீதம் நிர்ணயிப்பது பணி அனுபவத்திற்கான மதிப்பெண்தான்.
தரமான பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஆசிரியர் தகுதித்தேர்வு, போட்டித்தேர்வுநடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம், தரமானஉதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு மட்டும் அதுபோன்று போட்டித்தேர்வு நடத்தாமல், சிறப்பு மதிப்பெண் வழங்கி தேர்வு செய்வது முரண்பாடாக இருக்கிறது
நேர்முகத்தேர்வின்போது, வேண்டியவர்களுக்கும், சிபாரிசு பெற்று வருவோருக்கும் கூடுதல் மதிப்பெண் வழங்குவதை தடுக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத்தேர்வை போன்று, இந்த நேர்முகத்தேர்வையும் முழுவதும் வீடியோவில் பதிவுசெய்திட வேண்டும் என்று உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க தயாராக இருக்கும்முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment