ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய1.12 லட்சம் தமிழ் மாணவர்கள் கல்வித்துறை அதிர்ச்சி உத்தமபாளையம்:ஆங்கிலவழிக் கல்வி மோகத்தால், ஆண்டுதோறும் தமிழ்வழிக் கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில், தமிழ் வழியில் சேர வேண்டிய ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் ஆங்கிலக் கல்விக்கு சென்றுள்ளது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில், பள்ளியில் சேராக் குழந்தைகள். இடைநின்ற மாணவர்கள், இடம் பெயர்ந்த மாணவர்கள், வயது வந்தும் பள்ளியில் சேரா குழந்தைகள் மற்றும் பள்ளி வயது வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள், குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படும். அங்கன்வாடி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் சார்ந்த, மக்கள் தொகை கணக்கெடுப்பு பகுதியில், 14 வயது வரையிலான மாணவர்களின் ஒட்டுமொத்த விபரங்களும் சேகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பு மே இறுதியுடன் நிறைவடைந்துள்ளது. இக்கணக்கெடுப்பின்படி, நடப்பு கல்வியாண்டில் (2013-14) தமிழ்வழிக் கல்வியில் சேர வேண்டிய 1லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள், ஆங்கில வழிக் கல்விக்கு விரும்பி சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஆங்கில கல்வி மோகமானது, நடப்பு கல்வியாண்டில் மட்டும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இத்தகவல் கல்வித்துறையில் "அதிர்வலைகளை' ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog