TET மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள்.

பள்ளிக்கல்வித் துறையில் TETமூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அவர்களால் 15 கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளது. 

 அதில் 13 வது நிபந்தனை இடம் பெற்றுள்ள தகவல் "TET மூலம் தேர்வான சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள பள்ளியில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும்” என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே TET மூலம் தேர்வான ஆசிரியர்கள் இவ்வாண்டு நடைபெறும் பணிமாறுதலுக்கு தகுதியற்றவர்கள் ஆவர். 

 இதே தகவல் தொடக்கக்கல்வி துறையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பொருந்தும். இருப்பினும் ஒரு ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பம் தகுதியானதா இல்லையா என தரம்பிரித்து ”அ” மற்றும் ”ஆ” பதிவேடுகள் தயார் செய்வது கல்வித்துறை பணியாளர்களின் பணி என்பதால் தாங்களும் தங்கள் பணி மாறுதலுக்கு விண்ணபிக்கலாம்.

 பணி மாறுதல் குறித்த அறிவுரையில் இறுதி கட்டத்தில் தங்களுக்கு சாதகமாக ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த விண்ணப்பங்கள் நிச்சயம் பயன்படும்.

Comments

Popular posts from this blog