அரசு கொண்டு வந்துள்ள ஆங்கில வழிக்கல்வியில் தேவையான மாற்றங்கள் - Special Article
*. ஆங்கில வழிக்கல்வி என்பது மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டும்.
*. ஒரு ஆங்கில் வழிக்கல்வி பள்ளிக்கும், மற்றோர் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கும் இடையே இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு வரையறுக்கப்பட வேண்டும்.
*. குறிப்பாக தமிழ்வழி கல்வி உள்ள பள்ளியிலேயே ஒரு பிரிவாக ஆங்கில வழிக்கல்வியும் செயல்படாமல் மூன்று தமிழ்வழி பள்ளிகளுக்குஇடையே ஆங்கில வழிக்கல்வி மட்டுமே முழுக்க கற்பிக்கும் ஒரு ஆங்கில வழி பள்ளியாக துவக்கப்பட வேண்டும்.( Separate Schools for Tamil & English Medium Schools)
*. ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் கொண்டு வருவது நல்ல திட்டம் தான் என்றாலும் ஆங்கில வழிக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களை மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி, ஊராட்சி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் என தரம் பிரிப்பது போல் தனியாக ஆங்கில வழிக்கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் தரம் பிரிக்கலாம். இதன் மூலம் தேவையான பயிற்சிகளை எளிதாக வழங்க இயலும்.
*. ஆங்கில வழிக்கல்வியில்கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக இப்பள்ளிகளில் பணிபுரிய மூத்த பணி மூப்பு அடிப்டையில் ஆசிரியர்களுக்கு விருப்பம் உள்ள ஆசிரியர்களை பயன்படுத்திகொள்ளலாம்.குறிப்பாக TET மூலம் தேர்வான இளைய சமுதாயத்தினரை இதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
*. ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு தேவையானபுத்தகங்கள் மற்றும் செயல்வழிக்கற்றல் அட்டைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாகதேவையான பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
*. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் சீருடையில் சிறிய வித்தியாசமாவது காண்பிப்பது குறித்து அரசு கல்வியாளர்களை கலந்தாலோசிக்க வேண்டும்.
*. ஆங்கில வழிக்கல்வி பயிலும் பள்ளிகளில் இதற்கென தனியாக பெற்றோர் – ஆசிரியர் குழு அமைக்க வேண்டும். அவர்கள் தேவையான தீர்மானம் நிறைவேற்றி மாணவர்களுக்கு தேவையானபோக்குவரத்து வசதி உட்பட பல்வேறு வசதிகளைதாங்களே செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
*. இதைத்தான் படிக்க வேண்டும் என வற்புறுத்தாமல்”அனைத்தும் உள்ளது, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் தேவையான வழியில் கல்வி கற்கலாம்” எனும் வாய்ப்பை வழங்க வேண்டும்.
*. மற்றொரு புரட்சி திட்டமாக தமிழ் வழியோ, ஆங்கில வழியோ விருப்பப்படும் மாணவர்களுக்கு இந்தி மொழியையும் ஒரு பாடமாக (மும்மொழிக் கல்வி திட்டம்) கற்கும் வாய்ப்பை அரசு பள்ளிகளில் ஏற்படுத்திதர வேண்டும்.
ஆங்கில வழி கல்வியை எதிர்க்கும் பலரும் தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்கின்றனர் எனும் மறுக்க முடியாக குற்றச்சாட்டு உள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணம்”தாராளமயமாக்கப்பட்ட உலகில் ஆங்கிலம் தவிர்க்கப்பட முடியாத தொடர்பு மொழி” ஆகும். எனவே இந்த வாய்ப்பை அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்என்பதே பாடசாலையின் விருப்பமாகும்.
Thanks to www.padasalai.net
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment