பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை- ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார்
ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளபகுதி நேர கணினி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும் தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
12ம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட கணினி பட்டயப்படிப்பு கல்வித்தகுதி பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. உத்தேச பதிவுமூப்பு: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னுரிமையற்றவர்கள் 29.08.2005 வரையிலும், பிற்படுத்த வகுப்பினர் முன்னுரிமையற்றவர்கள் 28.07.2000 வரையிலும், பொது போட்டியாளர் முன்னுரிமையற்றவர்கள் 22.05.2002 வரையிலும் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விபரத்தை வரும் 17ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து உறுதி செய்து கொள்ளலாம். அடையாளஅட்டை மற்றும் பதிவுசான்றிதழ், கல்வி சான்றிதழ்களுடன் வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment