அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி 

 பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ள ஆங்கிலமோகத்தால், தங்களது குழந்தைகளை மெட்ரிக்., பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைகிறது. தமிழ் வழிகல்வியில் படிக்கும் குழந்தைகளை கவர, அரசு 14 வகையான பாடப் பொருட்கள் இலவசமாக வழங்கியும் கூட, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. 

இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,"ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பள்ளிகளில் 20 குழந்தைகளை சேர்த்து, 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஆங்கில வழிகல்வி வகுப்புகள் துவக்க, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. 

ஆங்கில வழி கல்வி வகுப்புகளை துவக்கி, அதன் அறிக்கையை உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவதுடன், தலைமை ஆசிரியர்களே தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கையை அதிகப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog