அரசு தொடக்கப்பள்ளிகளை ஆங்கிலவழி பள்ளிகளாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பேராபத்து
தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு, தமிழ்வழி கல்விக்கு வேட்டு வைத்துள்ளது.
அன்னைத்தமிழ் மொழிக்கு பேராபத்தை ஏற்படுத்துவதாகும். வளர் தலைமுறை குறிப்பாக, பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியில் பயில்வதைவிட்டு, ஆங்கில மொழியில் பயில்வதற்கு ஊக்குவிப்புத்தந்து ‘‘மெல்லத்தமிழ் இனி சாகும்; மேலை மொழியே இங்கு ஓங்கும்’’ எனும் பெரும் விபரீதத்துக்கு தமிழக அரசின் முடிவு வழிவகுக்கும்.
பெற்றோர்கள் மீது பழி
தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு அரசு பள்ளிகளும் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பயிற்று மொழி என்பதை ஏற்பதற்கில்லை. அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவிடாமல் தடுப்பது எது?
தமிழ் பயிற்றுமொழிதானா, இங்கிலீஷ் மீடியம் வேண்டும் என பெற்றோர் விரும்புகிறார்கள் என்று பொதுமக்கள் மீது பழியைப் போடாமல், தமிழ்வழிப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அத்துடன் தொடக்கப் பள்ளியில் மட்டுமல்லாமல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும், ஏன் கல்லூரி படிப்பிலும் கூட, தமிழையேபயிற்றுமொழியாக்குவது போன்ற உருப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
தாய்மொழி கட்டாயம்
அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கேரளத்தில் மலையாள வழி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் தனி மதிப்பெண் கொடுப்பதுபோல் இங்கேயும் தமிழ்வழி படித்தவர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். கடந்த 1998–ம் ஆண்டு தமிழ்ச்சான்றோர் பேரவை தமிழண்ணல் தலைமையில் நடத்திய 102 தமிழுணர்வாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் அன்றைய தமிழகஅரசு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து, அக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாய பயில்மொழியாகவும், பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று ஆணையிட்டது.
மெட்ரிக் பள்ளி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு அந்த அரசாணை செல்லாது என்று கூறி விட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு 1999–ல் சுப்ரீம் கோர்ட்டில் செய்த முறையீடு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கை விரைந்து முடித்து தமிழுக்கு சாதகமான தீர்ப்பு பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஆங்கில வழி வகுப்புகளை விரிவாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், தமிழ்வழி கல்விக்கு தகுந்த முறையில் ஊக்கம் அளிக்கும் நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment