பள்ளி, உயர்கல்விக்காக ரூ.21 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் சாதனை: ஒ.பன்னீர்செல்வம்
தமிழக ஒட்டு மொத்த வரலாற்றில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்காக நான்கில் ஒரு பங்கு நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் சாதனை செய்துள்ளதாக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைஅருகே வெள்ளைக்கோட்டையில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அதிமுகவின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்கள்.
இதில், நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது: அதிமுக அரசின் கடந்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவருகிறார். தற்போது, 3-வது முறையாக 12 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பை வகித்து, 13-வது ஆண்டாக ஆட்சி செய்யும் உரிமையைதமிழக மக்களிடம் இருந்து முதல்வர் பெற்றுள்ளார். இதேபோல், எம்.ஜி.ஆர் 11 ஆண்டு காலம் நல்லாட்சி செய்தார். இந்தியாவிலேயே நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு தனிப்பட்ட இயக்கம் 23 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும் வாய்ப்பை அதிமுக இயக்கம் தான் பெற்றுள்ளது.
கருணாநிதியின் சதியை முறியடித்து எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கழகத்தை, ஒரே இயக்கமாக ஒரு கோடி பேரை கொண்டுள்ள இயக்கமாகவும், யாரலும் அசைக்க முடியாதகோட்டையாக தமிழக முதல்வர் உருவாக்கி தந்துள்ளார். அதேபோல், அகிலந்திய அளவில் எந்த முதல்வரும் சாதிக்க முடியாத சாதனையை நிதி நிலை அறிக்கை மூலம் நிறைவேற்றியுள்ளார். 2011ல் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் ஒரு லட்சம் கோடியும், 2-வது ஆண்டில் ரூ.1.21 லட்சம் கோடியும், தற்போது 3-வது ஆண்டாக ரூ.1.41 ஆயிரம் கோடியாகவும் நிதி நிலையை அறிக்கையை தாக்கல் செய்த ஒரே முதல்வராக திகழ்கிறார்.
ஏழை எளிய மக்கள் அனைவரும் அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்ற வகையில் விலையி்ல்லா கறவை மாடு, ஆடுகள் ஆகியவைகளை வழங்கி வருகிறார். தற்போது, இத்திட்டத்தின் மூலம் கடந்த 2011ல் 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வென்மை புரட்சியை உருவாக்கி இருக்கிறார். அதோடு, நான்கு ஒரு பங்கு நிதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் அடிப்படையில் ரூ.21 ஆயிரம் கோடியை பள்ளிக் கல்விக்காகவும் உயர் கல்விக்காகவும் ஒதுக்கீடு செய்துள்ளார்.தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் 4 கலை அறிவியல் கல்லூரிகளாக இருந்த கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது 36 கலைக்கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 பாலிடெக்னிக் கல்லூரிகள் என அதிகம் உருவாக்கி கல்வித் தாயாக முதல்வர் விளங்குகிறார். மேலும், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் 14 அம்ச திட்டங்களை இலவசமாக செயல்படுத்தி சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment