ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணியிடம் விரைவில் நிரப்ப நடவடிக்கை
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்(ஆர்.டி.ஓ.,) காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, 1.70 கோடி வாகனங்கள் உள்ளன. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டும், 1.41 கோடி. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகனங்கள் பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி அதிகரித்துள்ளது.
தமிழகத்தில், 70 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 54 பகுதி அலுவலகங்கள், 19 சோதனை சாவடிகள் உள்ளன. புதிய வாகனங்களின் பதிவு, வாகனங்கள் உரிமம் புதுப்பித்தல், வாகனங்களின் ஆய்வு, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள், வட்டார போக்குவரத்து
அலுவகங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த, 2012 - 13ம் ஆண்டில், போக்குவரத்து துறையில், உதவியாளர், 146; சுருக்கெழுத்து தட்டச்சர், 8; இளநிலை உதவியாளர், 43; தட்டச்சர், 44; அலுவலக உதவியாளர், 26; காவலர், 14, என, மொத்தம், 281 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இருப்பினும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களை பொறுத்தவரை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், 75; அலுவலக உதவியாளர், 105; கண்காணிப்பாளர், 40; உதவியாளர், 145; இளநிலை உதவியாளர், 92; உள்ளிட்ட, 600க்கும்மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது குறித்து, போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 15க்கும் மேற்பட்ட, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஒரு வட்டார போக்குவரத்து அலுவலர், ஒன்றுக்கு மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் பணியை, கவனித்து கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது. எனவே, காலி பணியிடங்களை, விரைவில் நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக, பணியாளர் தேர்வாணையத்திற்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், காலி பணியிடங்கள் நிரப்பப்படும்' என்றார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment