கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது - கோவா முதல்வர்
கல்வி பெறும் உரிமை சட்டம்என்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கை என கோவா முதல்வர் மனோகர் பரிகர் தெரிவித்துள்ளார். கல்வி பெறும் உரிமை சட்டம் குறித்து மாநில முதல்வர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவா மாநில முதல்வர் மனோகர் பரிகர் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் குறித்து கடுமையாக தாக்கி பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கல்வி பெறும் உரிமை சட்டம் என்பது நல்ல விஷயம் தான்; நான் அதை தடுக்கவில்லை; ஆனால் அச்சட்டத்தை அமல்படுத்தும் முறை முற்றிலும் தவறானது; முறைப்படுத்தப்படாத ஒரு சட்டத்தை அமல்படுத்த நினைப்பது மத்திய அமைச்சர் கபில் சிபலின் முட்டாள் தனமான கொள்கையையே காட்டுகிறது;
அவரது கொள்கைப்படி கல்வி பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தினால் கல்வி என்பது கேலிகூத்தாகி விடும்; அதிக அளவிலான மாணவர்கள் 9ம் வகுப்புக்கு தானாகவே வந்து விடுவர்; மாணவர்கள் தேர்வுக்கும் வரமாட்டார்கள்; அவர்கள் தாங்கள் எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடுவர் என்பதை அறிந்திருப்பதால் தேர்வு எழுதுவதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு மனோகர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி தரம் குறித்து பேசிய மனோகர் கூறுகையில், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதை நான் எதிர்க்கவில்லை; ஆனால் மாணவர்களின் முறையான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.
கோவா அரசின் கல்வி இலாக்காவை தன் வசம் வைத்துள்ள மனோகர் பரிகர், இந்த ஆண்டு கோவா மாநிலத்தில் 6500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எஸ்.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் கடுமையான வடிகட்டுதல் நடவடிக்கையை கோவா அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த ஆண்டு 18,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்ட 11,500 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் ஹச்.எஸ்.எஸ்.சி.,க்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என கோவா அரசு உறுதி அளித்துள்ளது.

Comments
Post a Comment