ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம்
நெல்லை: ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதி தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு சுமார் 3மாத அவகாசம் இருக்கும் நிலையில், இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் சேர தமிழகத்தில் தகுதி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, முதல் முறையாக 22 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஆனால் 2 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். இதையடுத்து, அக்டோபர் மாதம் 14ம் தேதி மீண்டும் தகுதித் தேர்வு நடைபெற்றது.தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கு விண்ணப்பித்திருந்த 88 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றனர். 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை.இதையடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது, ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தஆண்டு தகுதித் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், இந்த ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு கிட்டத்தட்ட மூன்று மாத அவகாசம் இருக்கிறது. இதையடுத்து தகுதித் தேர்வை சந்திக்க இப்போதே பலர் ஆயத்தமாகி வருகின்றனர். தகுதித் தேர்வு மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களும் களம் இறங்கி உள்ளன.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment