ரூ.5 ஆயிரம் மாத சம்பளத்தில் 1,900 பகுதிநேர ஆசிரியர் நியமனம் சான்று சரிபார்ப்பு பணி துவங்கியது நெல்லை: தமிழகம் முழுவதும் அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு கடந்த ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.எனினும் பணியை விட்டு விலகியவர்கள், பணியில் சேராதவர்கள் எனமாநிலம் முழுவதும் 1,900 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியானது. இந்தஇடங்களை நிரப்பும் பணிகள் கடந்த மாதம்தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் பெறப்பட்டன.விண்ணப்பம் சமர்ப்பித்த ஆசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஒன்று முதல் 8ம் வகுப்புகளில் 5 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள், 10 பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள், தலா 2 பகுதி நேர தையல் ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள்பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடக்கிறது.இது குறித்து கல்வித் துறையினர் கூறுகையில், Ôபகுதி நேர ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் பணியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரம் மூன்று நாள் இவர்கள் பள்ளியில் பாடம் எடுக்க வேண்டும். இவர்களுக்கு மாத ஊதியமாக ஸீ5 ஆயிரம் வழங்கப்படும்‘ என்றனர்.

Comments

Popular posts from this blog