முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் தமிழ் வழி படித்தவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு 7 மையங்களில் இன்று ஆரம்பம்.
முதுகலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் 7 மையங்களில் சான்றிதழ்சரி பார்ப்பு பணி இன்று (23ம் தேதி) ஆரம்பமாகிறது.தமிழகத்தில் 2011-12ம் கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர்மற்றும் உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 நியமனத்திற்கான எழுத்துதேர்வு நடந்தது. இதற்கான விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை கோரியர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது.இதில் வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களில் தமிழ் வழிக்கு ஒதுககப்பட்ட பணி இடத்தில் பெரும்பாலானவர்கள் உரிய சான்றிதழ்களைசமர்ப்பிக்கவில்லை. எனவே, மீதமுள்ள பணி நாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மார்க் பெற்றவர்கள் மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரி பார்க்க தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நாடுனர்களின் விபரம் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இவர்களுக்கு நெல்லை, திருச்சி, மதுரை, கோவை, சேலம்,விழுப்புரம், சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி) சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை வி.எம் சத்திரம் ரோஸ்+மேரி மெட்ரிக் பள்ளியில் இப்பணி நடக்கிறது.சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் ஈடுபடும் கல்வித் துறை அலுவலர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் உமா பயிற்சி அளித்தார். சான்றிதழ் சரி பார்க்க ஏற்கனவே தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பபட்டுள்ளது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment