தகுதி இல்லாதவர்கள் நியமனம் சிறப்பு ஆசிரியர்களால் கல்வி அழிகிறது
புதுடெல்லி, மே 21:
ஆரம்ப பள்ளிகளில் மாநில அரசுகள், போதிய கல்வி தகுதி இல்லாத சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநில ஆரம்ப பள்ளிகளில் �சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்பும், இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. கல்வி உதவியாளர்களாக நியமிக்கப்படும் இந்த சிறப்பு ஆசிரியர்களின் கல்வி தகுதியை அறிய விரும்புகிறோம். உத்தரப் பிரதேசத்தில் �சிக்ஷா சகாயக்� என்ற பெயரில் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் உதவியாளர்கள் அல்ல கல்வியின் எதிரிகள். நாம் அளிக்கும் கல்வியின் தரம் மிக முக்கியம். முறையான கல்வி தகுதியில்லாத சிறப்பாசிரியர்களை நியமிப்பதால், ஒட்டுமொத்த கல்வி முறையை அழிக்கிறோம்” என்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment