ஆசிரியர்த் தகுதித் தேர்வு ஜூன் 2013ல் நடக்காது ?
கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜூன் 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கும் என மார்ச் 7ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு ஜூலை 12ம் தேதி தகுதி தேர்வு நடந்தது. இந்த ஆண்டில் ஜூனில் தகுதித் தேர்வு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அறிவிப்புக்கு பின்னர் தேர்வுக்கு தயாராக 2 மாதங்களாவது அவகாசம் அளிக்க வேண்டும் என்பதால் இந்த ஜூனில் தேர்வு நடப்பது என்பது சாத்திய குறைவு. ஆசிரிய சங்கங்கள் தகுதித்தேர்வை இரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருவதால், TET இரத்தாகுமா? பதிவு மூப்புப்படி நடக்குமா? என்ற கேள்வி அதிகமாக தற்போது எழுகிறது. தற்போதைய சூழல்படி TET தாமதமானாலும், அது நிச்சயமாக நடக்கும் என்பதே.
கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்துக்கு ஏதாவது வழிவகை செய்துமாணவர்கள் நலனை காக்க வேண்டும் என பெற்றோர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Thanks to Teachertn.com
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment