196 தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 27-ல் பணி நியமன கலந்தாய்வு
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட தாவரவியல் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 196 பேருக்கு திங்கள்கிழமை (மே 27) பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 310 இளநிலை உதவியாளர்களுக்கும் ஆன்-லைன் மூலம் திங்கள்கிழமை பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,800-க்கும் அதிகமானோரைத் தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாவரவியல் ஆசிரியர்களின்தேர்வுப் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
தாவரவியல் ஆசிரியர்கள் 196 பேர் கொண்ட பட்டியல் பள்ளிக் கல்வித் துறையிடம் அண்மையில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாவரவியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள் ஆகியோர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை காலை 9 மணிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆன்-லைன் மூலம் நடைபெறும் பணி நியமன கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்று, பணியிடங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

Comments
Post a Comment