யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வை போல இனி ஆண்டுக்கு 2 தடவை ‘ஸ்லெட்’தகுதித்தேர்வு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு
சென்னை யு.ஜி.சி. ‘நெட்’ தேர்வைப் போன்று மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வையும் இனி ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்த தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
தகுதித்தேர்வு யு.ஜி.சி. என்று அழைக்கப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறையின்படி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால். ‘நெட்’ அல்லது ’ஸ்லெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பி.எச்டி. பட்டதாரிகளுக்கு மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அகில இந்திய அளவிலான ‘நெட்’ தகுதித்தேர்வினை யு.ஜி.சி. நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம். ‘ஸ்லெட்’ தகுதித்தேர்வில் வெற்றிபெற்றால் அந்த மாநிலத்தில் மட்டும்தான் பணியாற்ற முடியும். ஸ்லெட் தேர்வை நடத்த மாநிலத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படும். ஸ்லெட்–நெட் தேர்ச்சி தமிழ்நாட்டில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்லெட் தேர்வை நடத்தியது.
அதன் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன.யு.ஜி.சி.யின் நெட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு திட்டமிட்டபடி தேர்வு தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன் வெளியிடப்படும். நெட் தேர்வு ஆண்டுதோறும் கண்டிப்பாக நடத்தப்படுவதால், அதற்கு தயாராவோர் நன்கு திட்டமிட்டு படிக்க முடியும்.
ஆனால், ஸ்லெட் தேர்வு அப்படி அல்ல. 2 ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, இஷ்டம்போல் நடத்தப்பட்டு வந்தது. இதனால், ஸ்லெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று மாணவ–மாணவிகளால் யூகிக்கக்கூட முடியவில்லை.
இனி ஆண்டுக்கு 2 முறை இந்த நிலையில், இப்பிரச்சினை குறித்து,அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், யு.ஜி.சி. நெட் தேர்வைப் போன்று ஸ்லெட் தேர்வையும் இனிமேல் ஆண்டுக்கு 2 தடவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,063உதவி பேராசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நெட் அல்லது ‘ஸ்லெட்’ தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டம் பெற்றவர்களாக இருந்தால் ஸ்லெட், நெட் தேர்ச்சி தேவையில்லை

Comments
Post a Comment