ஆசிரியர் தகுதித்தேர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள்
சென்னை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:– கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் ‘நெட்’ ஸ்லெட் தகுதித்தேர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினருக்கும், பி.சி., எம்.பி.சி. போன்ற பிரிவினர்களை உள்ளடக்கிய ஓ.பி.சி. வகுப்பினருக்கும் மதிப்பெண்தகுதி, பொதுப்பிரிவினரை காட்டிலும் 5 சதவீதம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்பட அனைவருக்கும் ஒரே மதிப்பெண் தகுதி (60 சதவீதம்) என்று உள்ளது. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கலாம் என்று என்.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது.
எனவே, ஆசிரியர் தகுதித்தேர்வில், எஸ்.சி, எஸ்.டி. பி.சி., எம்.பி.பி. மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும்என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், துறையின் முதன்மைச்செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்ஆகியோருக்கு மனுவின் நகல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Comments
Post a Comment