அரசு பாலிடெக்னிக்குகளில் 579 புதிய ஆசிரியர் பணியிடங்கள் அரசு பாலிடெக்னிக்குகளில், 579 ஆசிரியர்கள் பணியிடங்களை உருவாக்கி, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 30 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இக்கல்லூரிகளில், 15 ஆண்டுகளாக ஆசிரியர், அலுவலர் பற்றாக்குறை நீடிப்பதால் தரமான கல்வி கேள்விக்குறியானது. மாணவர்கள் அதிகரிப்புக்கு ஏற்ப ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை.

 மேலும் கல்லூரிகளில் இடப்பற்றாக்குறையால் "ஷிப்டு" முறை அமலானது. பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து சமாளித்தனர். ரெகுலர் ஆசிரியர்கள் கற்பித்தலுடன், ஆய்வுக்கூடம், பட்டறைகளை நிர்வகிப்பது போன்ற பணிகளையும் செய்து வந்தனர். இதனால் வேலைப்பளு அதிகமாக இருந்தது. 

இதையடுத்து கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனத்தை சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாலிடெக்னிக்குகளுக்கு துறைத் தலைவர்கள், பேராசிரியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறையின் இந்த உத்தரவில் (அரசாணை எண்: எம்.எஸ்.48, நாள்: 28.3.2013) அரசு பாலிடெக்னிக்குகளுக்கு மாணவர்களின்எண்ணிக்கைக்கு ஏற்ப, 37 துறைத் தலைவர்கள், 542 விரிவுரையாளர் புதியபணியிடங்களை அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் மற்றும் உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு தலைவர் கணேசன் கூறுகையில், "15 ஆண்டுகளுக்கு மேலானகோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளதற்கு நன்றி. புதிய பணியிடங்கள் தோற்றுவித்ததால், ஆசிரியர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. 

மாணவர்களுக்கு தரமானகல்வி கிடைக்கும். காலியிடங்கள் நிரப்பப்படுவதால் பிற ஆசிரியர்களின் வேலைப்பளு குறையும்" என்றார்

Comments

Popular posts from this blog