பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ்

சிவகங்கை : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் பகுதி1ல் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள்,பகுதி 2ல் 10 இரண்டு மதிப்பெண் கேள்விகள், பகுதி 3ல் 9 ஐந்து மதிப்பெண் கேள்விகள், பகுதி 4ல் 2 பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் பகுதி 3ல் கேட்கப்பட்ட 5 மதிப்பெண் கேள்விகள் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் கேட்கப்படவில்லை. அதிலும் சில கேள்விகள் கடினமாக இருந்தன. 

கட்டாயமாகஎழுத வேண்டிய 45வது கேள்வியில், பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கணிதத் தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் குறையும் என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. இதில் கணித பாடத்திற்கு கொடுக்கப்பட்ட ‘ஆன்சர் கீயில்‘ 2 ஐந்துமார்க் வினாக்களுக்கு போனசாக 10 மார்க் கொடுக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

மொத்தம் எழுத வேண்டிய 9 கேள்விகளில் 7 கேள்விகள் சரியாக எழுதி, 2 கேள்விகள் தவறாக எழுதியிருந்தால் 10 மார்க் போனசாக வழங்க வேண்டும் அல்லது 2 கேள்விகளுக்கு மட்டும் குறைவாக மார்க் பெற்றிருந்தாலும் முழுமையான 10 மார்க் வழங்கப்படும். 

இவ்வாறு தேர்வுத்துறையினர் வழங்கிய ‘கீயில்‘ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்ச்சி விகிதமும், சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

Comments

Popular posts from this blog