பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு: மே 1-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 112 பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: அனைவருக்கும் கல்வி இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் கற்பிக்க ஒப்பந்த அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி உடற்கல்வி ஆசிரியர்கள் 55, ஓவிய ஆசிரியர்கள் 27, தையல் ஆசிரியர்கள் 8, இசை ஆசிரியர்கள் 2, கணினி ஆசிரியர்கள் 16, வாழ்வியல் திறன் ஆசிரியர்கள் 2, கட்டுமான ஆசிரியர்கள் 2 என மொத்தம் 112 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத உழைப்பூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பணி நாடுநர்கள், காஞ்சிபுரம் ராணி அண்ணாதுரை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 26 முதல் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்து, வரும் மே 1-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் டாக்டர் சீனிவாச நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்உள்ள காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog