விடைத்தாள் திருத்துவதில் தவறு - ஆசிரியர்களுக்கு அபராதம் - கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு தண்டனை, அபராதம் வழங்க, கர்நாடக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களை, திருத்தும் ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் கூலியும் வழங்கப்படுகிறது. மாணவர்களின், எத்தகைய பதில்களுக்கு, எவ்வளவு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது, "ஆன்சர் - கீ" முறைப்படி, மதிப்பெண் வழங்கப்படுகிறது.
சில நேரங்களில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் தவறு செய்ய நேரிடுகிறது. உதாரணமாக, மதிப்பெண்ணை கூட்டுவதில் தவறு, மதிப்பெண் அளிக்க மறந்து விடுவது, தவறுதலாக அதிக மதிப்பெண் போட்டு விடுவது போன்ற தவறுகளை ஆசிரியர்களும் செய்வதுண்டு.
அத்தகைய தவறுகளுக்கு, ஆசிரியர்களை பொறுப்பேற்க செய்யும் வகையில், ஒவ்வொரு தப்புக்கும், ஒவ்வொரு விதமான தண்டனை, அபராதம் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சம்,15 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், விடைத்தாளை திருத்திய ஆசிரியருக்கு, எச்சரிக்கை மட்டும் கொடுக்கப்படும்.
15 மதிப்பெண் முதல், 30 மதிப்பெண் வரை வித்தியாசம் இருந்தால், தவறு செய்த ஆசிரியருக்கு, அதிகபட்சம், 1,000 ரூபாய் அபராதமும், கண்டன நோட்டீசும் அளிக்கப்படும்.
மொத்தம், 30 மதிப்பெண் முதல், 50 மதிப்பெண் வரை வித்தியாசம் இருப்பின், அந்த ஆசிரியரின் பணிப்பதிவேடுகளில், அவரின் தவறான செயல் குறிப்பிடப்படும். அதற்கும் மேல் தவறு செய்தால், ஆசிரியருக்கு வழங்கப்படும், ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.
இவ்வாறு, ஒவ்வொரு படியாக தண்டனை மற்றும் அபராத அட்டவணையை, கர்நாடக கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment