ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணியில்லை:
தாவரவியல் பட்டதாரிகள் தவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்திய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டாகியும், இதுவரை பணி நியமனம் கிடைக்காமல், தாவரவியல் முதுகலை பட்டதாரிகள் தவிக்கின்றனர்.
தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு பாடங்களின் முதுகலை பட்டதாரிகளுக்கான போட்டி தேர்வை, 2012ம் ஆண்டு மே 27ல், டி.ஆர்.பி., நடத்தியது. ஜூலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக ஜூலை 4ம், இரண்டாவது கட்டமாக அக்.,31ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து, தாவரவியல் பட்டதாரிகளை தவிர பிற பிரிவுகளை சேர்ந்த பட்டதாரிகளுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
அப்போது விடுபட்ட பட்டதாரிகளுக்கு, நேற்று ஆன்லைன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்கள் ஒதுக்கி, நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், தாவரவியல் பட்டதாரிகளுக்கு அழைப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் சிலர்கூறியதாவது: தாவரவியலில் 500 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளோம். எங்களுக்கு எப்போது பணி நியமன உத்தரவு வழங்கப்படும் என்று தெரியவில்லை, என்றனர்.

Comments
Post a Comment