முதுநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் நியமனம் வழங்கப்பட்டது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வுசெவ்வாய்க் கிழமை தமிழகம் முழுவதும்நடைபெற்றது. ஆன்லைன் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.
2011 - 12 ஆண்டிலும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் உருவான700 காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. முதலில் உள் மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும், பிறகு பிற மாவட்டங்களில் பணி பெறுவதற்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.
சென்னை மாவட்டத்தில் 5 காலிப் பணியிடங்கள் மட்டுமே இருந்தன. 10 தேர்வர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 5 பேர் கண் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் ஒதுக்கீடுகளைப் பெற்றவர்கள் ஜூன் மாதம் 3ஆம் தேதி பணியில் சேர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Comments
Post a Comment