பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் - அமைச்சர் வைகைச்செல்வன் 

பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.மாநில பள்ளி கல்வித் துறைஅமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதல் முறையாக அமைச்சர் வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார். 

விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ ராஜூ, ஆர் டிஓ குணசேகரன், திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல் நிலைப்பள்ளியில் கல்வித்துறை உயர் அதிகாரி கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பே சுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25 ஆண்டுகளாக முதலிடம் பெற்று, கல்வியில் முதன் மை மாவட்டமாக திகழ்கிறது. ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன் பணியாற்றினால் சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும்.

 கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். தமிழக முதல்வர் கல்விக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிட ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண் டும் என்றார். கூட்ட த்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 விருதுநகரில் எம்ஜிஆர் சிலை, அருப்புக்கோட்டையில் அண்ணா சிலை, காமராஜர் சிலை, தேவர் சிலை, எம்டிஆர் சிலை, பா ளையம்பட்டியில் பெரும் பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார். யூனியன் தலைவர் யோகவாசுதே வன், தொகுதி செயலாளர் சிவசங்கரன், மாவட்ட எம் ஜிஆர் இளைஞரணிதுணை தலைவர் எகியா கான், அதி முக பிரமுகர் சங்கரலிங்கம், ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், நகர செயலாளர் கண்ணன், விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகர்ராஜ், கந்தவேல், சுப்பு ராஜ், அரசு ஒப்பந்தகாரர் தேவதுரை, புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்பு ஆத்திபட்டியில் நடை பெற்ற தமிழக அரசின் இல வச பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.

Comments

Popular posts from this blog