கல்வி உரிமைச்சட்டத்தை அமல் படுத்திட மாநில அரசுகளுக்கு மேலும் கால அவகாசம் அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜூ தெரிவித்தார்.
புதுதில்லியில், நடைபெற்ற செய்தி யாளர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘‘கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள முக்கியமான நிபந்தனைகள் பலவற்றை நிறைவேற்றுவதில் பல மாநில அரசுகள் இன்னமும் மிகவும் பிந்தைய நிலையிலேயே இருக் கின்றன என்பது உண்மையே என்ற போதிலும், இதனை அமல்படுத்துவதற்காக மேலும் கால அவகாசம் எதுவும் அளிக்கப்பட மாட்டாது.’’ என்று கூறினார்.
ஆயினும் கல்வி உரிமைச் சட்டத்தின் நிபந்தனைகளைப் பின் பற்றாத பள்ளிகள் குறித்த அரசின் நிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அப்பள்ளிகள் மிக விரைவில் அவற்றை நிறைவேற்றி விடும்’’ என்று மட்டும் கூறி அமைச்சர் சாதுரியமாக நழுவிக்கொண்டார்.
வரும் மார்ச் 31க்குள் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளைக் கறாராகப்பின்பற்றாத பள்ளிகள் சட்டத்தின்படி மூடப்பட்டாக வேண்டும். மத்திய கல்வி ஆலோசனை வாரியம் சென்ற நவம்பரில் கூடியபோ து கூட, கல்வி உரிமைச்சட்டத்தின் காலக்கெடுவை நீட்டிப்பது இல்லை என்று ஒருமனதாக முடிவுசெய்துள்ளது என்றும், இச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய விதத்தில்மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் மாணவர் களுக்கு இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்படுவதைத் தடுத்துவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2013 மார்ச் 31க்குள் அனைத்துப் பள்ளிகளும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிட வேண்டும். 2015 மார்ச் 31க்குள் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று குறைந்தபட்ச தகுதியைப் பெற்றிட வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, பீகார், சத்தீஸ் கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தர்காண்ட், ஒடிசா, உத் தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 13 மாநில அரசுகள் விதிமுறைகளைத் தளர்த்திட வேண்டும் என்று கோரியிருக்கின்றன.
இந்த 13 மாநிலங்களில் வாடகைக்கு அமர்த்தப்பட்டும் மற்றும் பயிற்சியில் லாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக் கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தொலைதூரக் கல்வி மூலம் ஆசிரியர் பயிற்சி அளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும் 50 வல்லுநர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அக்குழு பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஆசிரியர் கல் வியை வலுப்படுத்திட பரிந்துரைகள் அளித்து வருகின்றன என்றும் கூறி னார்.
தலித் - பழங்குடியினர் மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர் அதிகமாக உள்ள ஒன்றியங்களுக்காக ஒன்றிய அளவிலான ஆசிரியர் கல்வி நிலையங்கள் அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.அரசாங்கமும் 40 பள்ளிகள் அமைத்திட திட்டமிட்டிருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.
பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்புகளை வளர்த்திடுவதற்காக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உதவியுடன் துவங்கிடவும் திட்டமிடப்பட்டுள் ளது என் றும் பின்னர் இது படிப்படி யாக ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்தப் படும் என் றும் அமைச்சர் கூறினார். (ந.நி.) நன்றி ..தீக்கதிர் நாளிதழ்

Comments
Post a Comment