அரசுப் பணியாளர் தேர்வில் தமிழ் பாடப் பிரிவு நீக்கம்: வைகோ கண்டனம்
அரசுப் பணியாளர் போட்டித் தேர்வில் தமிழ் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களில் மாற்றம் செய்துள்ளது.
இதில் தமிழ் வழியில் படித்த கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தமிழில் படித்தால் வேலை வாய்ப்பு இருக்காது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களைப்புகுத்தி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே, புதிய பாடத்திட்ட முறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments
Post a Comment