குரூப் 2, 4 தேர்விலும் மாற்றம்விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் நீக்கம்
நெல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் விஏஒ தேர்வில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.குரூப் 4, 2 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 72பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி நேற்று இரவு வெளியிட்டது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் முதன்மை பணிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி முதல் இளநிலை உதவியாளர், தட்டச்சர் வரையிலான அனைத்து பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை டிஎன்ப¤எஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான72 பக்க புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் நேற்றுஇரவு வெளிய¤டப்பட்டது.இதில் குறிப்பாக எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப் 4 பணியிடங்கள், விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும்,100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது.புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழை மட்டும் நன்றாக படித்து விட்டு தேர்வுக்கு செல்பவர்களின் நிலைமை சிக்கலாகி உள்ளது.இதேபோல விஏஒ தேர்வுக்கும் ஏற்கெனவே குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது விஏஒதேர்வுக்கு 150 வினாக்கள் (225 மதிப்பெண்கள்) பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகியவற்றிற்கும், 50 வ¤னாக்கள் (75 மதிப்பெண்கள்) கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள் ளது. பொதுத்தமிழ் பகுதிக்கு இதுவரை 100 வினாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகள் எழுத வேண்டு¢ம்.நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது. குருப் 2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து வினா அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக குரூப் 1 முதல் குரூப் 7 வரையிலான தேர்வுகள், விஏஒ தேர்வு, தொழில்நுட்ப தேர்வுகள் 1, 2 ஆகிய 10 தேர்வுகளுக்கு72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிட்டது.ஐஏஎஸ் போன்றசிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment