6முதல் 10ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடம் 

 வேலூர்: அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வரும் கல்வி ஆண்டில் கம்ப்யூட்டர் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் தற்போது பிளஸ் 2 வகுப்புகளில் மட்டுமேகம்ப்யூட்டர் சயின்ஸ் தனி பாடமாக நடத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், தனியார்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதலே கம்ப்யூட்டர் பாடத்தை தனி பாடமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, வரும் கல்வி ஆண்டில் இருந்து அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

 இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குகம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக, மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் விவரங்கள் மாணவர்களின் விகிதம், தேவைப்படும் கம்ப்யூட்டர்கள், புதிதாகநியமிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் குறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள்கணக்கெடுத்து வருகின்றனர். வகுப்பு வாரியாக பாட புத்தகம் தயாரிக்கும் பணிநடந்து வருகிறது.

Comments

Popular posts from this blog