முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும் - மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி
முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்" என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்:
ம.ம.க., திரு.ஜவாஹிருல்லா : சிறுபான்மைகல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்தும், நிரப்பப்படாமல் உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் திரு. பழனியப்பன் : சிறுபான்மையினர் கல்லூரிகளில், 3,120 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அப்பணியிடங்கள் எந்த வகைகளில் காலியானவை என்பது குறித்து, மண்டல அளவில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அத்துடன் அந்த கல்லூரிகள், சிறுபான்மை தகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜவாஹிருல்லா: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 21 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், உருது, தெலுங்கு, மலையாளம் வழி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, தேர்வு பெற்றவர்களுக்கு இன்னும் நியமன உத்தரவு அளிக்கப்படவில்லை.
மாண்புமிகு. அமைச்சர் திரு. சிவபதி : சிறுபான்மை மொழி ஆசிரியர்களை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட, 69 தெலுங்கு, 21 கன்னடம், 24 உருது மற்றும் ஐந்து மலையாளம் என, 119 இடைநிலை ஆசிரியர்கள், 70 தெலுங்கு, 20 மலையாளம், ஒன்பது உருது மற்றும் மூன்று கன்னடம் என, 102 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முதுகலை ஆசிரியர்கள், 20 பேருக்கான பட்டியல், அடுத்த மூன்று தினங்களில்,ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் விரைவில் அவர்களும் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு விவாதம் நடந்தது.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரச...
Comments
Post a Comment