தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கம்
சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்றுஅமைச்சர்களை நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பதில் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தஎன்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எஸ்.விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதில், டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகைச்செல்வன், கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள டி.பி.பூனாட்சிக்கு கதர் மற்றும் கிராமத்தொழில்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.சி.வீரமணிக்கு சுகாதாரத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறைஅமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமியிடம் கூடுதலாக சட்டம், நீதிமன்றம், சிறைத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புஇலாகா ஒப்படைக்கப்பட்டுள்ளது புதிய அமைச்சர்கள் நாளை காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment