120 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு-

ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு தேர்வு எழுதியவர்களில் இருந்து, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் பட்டியலை, நேற்றிரவு, ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., வெளியிட்டது. 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொகுப்பூதியஅடிப்படையில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, 2009ல், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. 1,000த்திற்கும் மேற்பட்டோர், தேர்வில் பங்கேற்றும், மிக குறைந்த அளவே தேர்ச்சி இருந்தது.

 இதைத் தொடர்ந்து, 2010, ஜன., 24ல், மீண்டும், சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்ட கேள்விகளில், பல கேள்விகள் தவறாக இருந்ததாக கூறி, தேர்வர்கள், தொடர்ந்த வழக்கில், கடந்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், 20 கேள்விகளை (தலா 1 மதிப்பெண்) நீக்கம் செய்து, மீதம் உள்ள, 130 மதிப்பெண்களில், 50 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற, 120 பேரை தேர்வு செய்து, அவர்களின் தேர்வுப் பட்டியலை, இணையதளத்தில்,www.trb.tn.nic.in நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு, பள்ளி கல்வித் துறையில், இம்மாத இறுதிக்குள், பணி நியமனம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog