மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10% பேர் தேர்ச்சி
மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் (செட்) மிக அதிக அளவாக 10.64 சதவீதம் (5,495) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுவையில் 10 நகரங்களில் 76 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 51,669 பேர் எழுதினர். மொத்தம் 27 பாடங்களிலும் 5,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2011-ல் நடைபெற்ற ஸ்லெட் தேர்வில் 3.39 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஏறத்தாழ மூன்று மடங்காக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்ப் பாடத்தில் 826 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து வணிகவியல் பாடத்தில் 630 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸில் 589 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரத்தில் இயல் அறிவியல் பாடங்களில் மிகவும் குறைந்தபட்சமாக 125 பேர் (4.74 சதவீதம்) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 9 சதவீதம் பேர் தேர்ச்சியடையும் மதிப்பெண்ணையே கட்-ஆஃப் மதிப்பெண்ணாக நிர்ணயிக்க வேண்டும். அதுபோலவே, இந்தத்தேர்விலும் நிர்ணயிக்கப்பட்டது. சில பாடங்களில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் அதிகமானோர் இருந்ததால்மொத்த தேர்ச்சி விகிதம் சற்று உயர்ந்துள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளரும், விரிவுரையாளர் தகுதித் தேர்வு செயலாளருமான கே.ஜி.செந்தில்வாசன் கூறினார்.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை கூறும்போது, மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்துள்ளதால் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 2002-ல் 0.68 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2012-ல் 10.64 சதவீதமாக உள்ளது என்றார். தேர்ச்சி மதிப்பெண்: மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு மூன்று தாள்களாக நடத்தப்படுகிறது.
முதல் தாள்,இரண்டாம் தாள் ஆகியவை 100 மதிப்பெண்ணுக்கும், மூன்றாம் தாள் 150 மதிப்பெண்ணுக்கும் நடத்தப்படுகிறது. பொதுப்பிரிவு மாணவர்கள் முதல் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்ணும், மூன்றாம் தாளில் தேர்ச்சி பெற 75 மதிப்பெண்ணும் எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது தாளில் மட்டும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள்60 மதிப்பெண் (40 சதவீதம்) எடுத்தால் தேர்ச்சி பெறலாம்.
ஒவ்வொரு பாடத்துக்கும் 9 சதவீதம் பேர்தேர்ச்சி பெறும் மதிப்பெண்ணே கட்-ஆஃப்மதிப்பெண் என்பதால், தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தாலும் அனைவரும்விரிவுரையாளர் தகுதியைப் பெற முடியாது. ஆசிரியர்களின் தேவை மிக அதிகமாக உள்ளது: மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். விரிவுரையாளர்களின் தேவை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்றுபல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பாண்டியன் கூறினார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியது: கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 41,164 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,396 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தமிழ், ஆங்கிலம், மேலாண்மைப் பாடங்களில் மட்டுமே 1,080 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், நூலக அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் ஒருவர்கூட தேர்ச்சிபெறவில்லை.
எனவே, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும். அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 3,120 விரிவுரையாளர் பணியிடங்களும், அரசுக் கல்லூரிகளில் 1,200 பணியிடங்களும் இப்போது ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 81 தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விரிவுரையாளர்களுக்கு முன்னேப்போதும்விட தேவை அதிகமாக உள்ளது என்றார் அவர்.
தமிழகம் முழுவதும் விரிவுரையாளர்களுக்கான தகுதி தேர்வு பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் 2002-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ஸ்லெட் என்றழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, நாடு முழுவதும் ஒரே பெயரில் செட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை விரிவுரையாளர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் ஆண்டு தேர்ச்சி சதவீதம்
2002 0.68 %
2004 0.85 %
2006 2.20 %
2008 2.19 %
2011 3.39 %
2012 10.64 %
விரிவுரையாளர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பாடம் தேர்வு எழுதியோர் தகுதி பெற்றவர்கள் சதவீதம்
1. வேதியியல் அறிவியல் 2,639 136 5.15
2. வணிகவியல் 5,484 630 11.49
3. கம்ப்யூட்டர் சயின்ஸ் 6,587 589 8.94
4. பொருளாதாரம் 2,410 280 11.62
5. கல்வியியல் 2,164 264 12.2
6. எலெக்ட்ரானிக்ஸ் 210 7 3.3
7. ஆங்கிலம் 4,605 572 12.42
8. புவியியல் 413 51 12.35
9. ஹிந்தி 73 9 12.33
10. வரலாறு 2,815 387 13.75
11. ஹோம் சயின்ஸ் 251 22 8.76
12. ஊடகவியல் - 225 29 12.89
13. சட்டம் - 278 39 14.03
14. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் 1,118 149 13.33
15. உயிர் அறிவியல் 4,863 501 10.3
6. மேலாண்மையியல் 2,456 317 12.91
17. கணிதம் 4,778 329 6.89
18. இசை 86 13 15.2
19. தத்துவம் 53 9 16.98
20. உடற் கல்வியியல் 958 124 12.94
21. இயல் அறிவியல் (இயற்பியல் சார்ந்த பாடங்கள்) 2,638 125 4.74
22. பொலிட்டிகல் சயின்ஸ் 80 4 5.00
23. உளவியல் 135 17 12.59
24. பொது மேலாண்மையியல்86 12 13.95
25. சமூகப் பணி 261 38 14.56
26. சமூகவியல் 117 16 13.68
27. தமிழ் 5,886 826 14.03 மொத்தம் 51,669 5495 10.64

Comments
Post a Comment