முதல்வரிடம் பணி நியமன ஆணை பெற்றும் கலந்தாய்வில் பெயர் இல்லை : ஆசிரியை கதறல்-Dinakaran 01 Jan 2013 05:00, நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் கடந்த 13ம்தேதி முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இதில் நெல்லை மாவட்டத்தில் வணிகவியல் பாட ஆசிரியர் பணியிடத்திற்கு தென்காசியை சேர்ந்த அருண் ஷோபனாவும் உத்தரவு கடிதம் பெற்றார். இந்நிலையில், நேற்று நடந்த ஆன்லைன் கலந்தாய்வில் அவரது பெயர் பட்டியலில் இல்லை. இதற்கானஅழைப்பும் அவருக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில், சிஇஓவிடம் புகார் செய்தார். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண் ஷோபனா கதறி அழுதார். இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஆசிரியை அருண் ஷோபனாவின் உறவினர்கள் சென்னை டிஆர்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அதற்கு, உடனடியாக எதுவும் செய்ய முடியாது. ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக பதிலளித்தனர். இதையடுத்து அவர் சிஇஓ அலுவலகத்தில் இருந்து கண்ணீருடன் புறப்பட்டு ஊருக்குச் சென்றார்.

Comments

Popular posts from this blog