புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க தடை சென்னை : மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க புதிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் கட்டமாகஜூலை மாதம் நடந்தபோது 2,800 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த துணைத் தேர்வில் 17,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 19,343 பேருக்கு பணி வழங்கப்பட்டது. இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையங்களில்(டயட்) இந்த பயிற்சி இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. 

 இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு: அனைத்து மாணவர்களிடமும் அன்புடன் பழகுதல், வேறுபாடு பார்க்காமல் நடுநிலையுடன் நடத்தல், மாணவர்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்துதல் ஏற்படாத வகையில் நடத்தல், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

 மாணவர்களுக்கு கற்பிக்கும் போது நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களுடன் எப்படி உரையாடுவது, சக ஆசிரியர்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வது, உள்ளிட்டவை சொல்லித்தர வேண்டும். ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் யாரிடமும் நன்கொடை வாங்கக் கூடாது, மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு டியூஷன் நடத்தக் கூடாது, பள்ளியில் உடன் பணியாற்றுவோர் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog