தமிழ் வழியில் பி.எட் படித்தவர்கள் யார்?

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஉள்ள 3438 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த மே 27ம் தேதி போட்டி தேர்வு நடந்தது. 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் எழுதினர். 3103 பேர் தேர்ச்சி பெற்றனர். டிசம்பர் 11ம் தேதி பணி நியமனம் பெற தகுதி உள்ளவர்கள் பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. 

அந்த பட்டியலில் உள்ளபடி முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கப்பட்டது. அதே போல தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டம், பி.எட் பட்டம் ஆகியவற்றை தமிழ் வழியில் படித்துள்ளதாக விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள பட்டதாரிகளுக்கு அரசு உத்தரவுப்படி 20 சதவீதம் பணி நியமனம் வழங்கப்பட வேண்டியுள்ளது. 

இதையடுத்து எந்தெந்தபல்கலைக் கழகங்கள் தமிழ் வழியில் முதுநிலை மற்றும் பி.எட் பட்டங்களை நடத்துகின்றன என்ற விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் (பி.எட் பல்கலை) தனியார் பி.எட் கல்வி நிறுவனங்கள் தமிழ் வழியில் பி.எட் வகுப்புகளை நடத்தி பட்டம் வழங்கி இருக்கிறதா என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிய விரும்புகிறது. 

அதனால் பி.எட் பட்டம் நடத்தும் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் எழுதி விவரம் கேட்டுள் ளது. வரலாறு, வணிகவி யல், பொருளியல் பாடங் களை தமிழ் வழியில் படித்துள்ள முதுநிலைப் பட்டதாரிகளுக்கான காலிப் பணியிடங்கள் 150 வரை உள்ளன. பட்டியல் பெறப்பட்டதும், இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

Comments

Popular posts from this blog