ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தியாவில் ஆந்திரபிரதேசம் (APTET), அசாம் (ATET), பீகார் (BTET), ஒடிசா (OTET), ஹிமாச்சல் பிரதேசம் (HPTET), ராஜஸ்தான் (RTET), உத்தரபிரதேசம் (UPTET) என இத்தனை மாநிலங்களில் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படியொரு இட ஒதுக்கீட்டையே மறுத்து தகுதிதேர்வும் ஆசிரியர் நியமனங்களும் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் சமீபத்தில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.குறிப்பாக எ.சதீஷ் எதிர் தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (W.P.No.31706/ 2012) மற்றும் சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (W.P.No. 32283/ 2012) ராஜீவ்காந்தி எதிர் கூடுதல் செயலர், பள்ளி கல்வித்துறை மற்றும் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம். மேலும் பல வழக்குகள் தகுதி தேர்வு சம்மந்தமாக விசாரணையில் உள்ளன. அந்த பொதுநல மனுவில், ஆந்திர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென கோரி இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை கண்டித்தும் இடஒதுக்கீடு அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டு மென கலைஞர் மு. கருணாநிதி அறிக்கைவெளியிட்டார். அதேபோல திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர் மணி தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்காக தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என தொலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார். இறுதியாக, போட்டித்தேர்வுகள், தகுதி தேர்வு நடத்தும்போது ஐந்து நடைமுறைகளை கட்டாயம் பின் பற்றப்பட வேண்டும் என அழுத்தம் தருவோம். 1. தேர்வு நடத்தி முடித்தவுடன் சரியான (ஒரே) விடைகளை வெளி யிடப்பட வேண்டும். 2. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களின் அதாவதுவெற்றிப் பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் எவ்வித குளறுபடியும் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் பதிவு எண், பெயர், சாதியை குறிப்பிட்டு தெளிவாக வெளியிட வேண்டும். 3. இறுதி பட்டியல் வெளியிட்டவுடன் எவ்வித மாறுதலையே மறுப்பட்டியலோ கட்டாயம் வெளியிடக்கூடாது. 4. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்கள் குறித்த விவரத்தை சாதி வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும். 5. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்களை எந்தெந்த சாதியினர் பணி நியமனம் செய்யப்படவில்லையோ மீண்டும் அந்த சாதியினரை கொண்டே நியமனம் செய்யப்பட வேண்டும். இவைகளை செய்யவில்லை என்றால் தேர்வில் வெளிப்படையான தன்மைஇல்லை என்று அர்த்தமாகும். Thanks to நக்கீரன் செய்தி

Comments

Popular posts from this blog