5 வகுப்புக்கு ஒரே ஆசிரியர் பள்ளிக்கு பூட்டு போடுவோம் கூடுதல் ஆசிரியர் நியமனம் கோரி போராட மக்கள் முடிவு 

வேதாரண்யம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5 வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும், இல்லாவிடில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

 நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கொத்தங்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30 மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இங்கு தனலட்சுமி என்ற ஆசிரியையும், சிங்காரவடிவேல் என்ற ஆசிரியரும் பணியாற்றி வந்தனர். இதில் தனலட்சுமி வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்றுவிட் டார். குடும்ப பிரச்னை தொடர்பாக சிங்கார வடி வேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

அதன்பின் கடந்த வரு டம் ஜூன் மாதம் தலைமை ஆசிரியராக மகேந்திரன் என்பவர்பொறுப்பேற்றார். அதிலிருந்து 5 வகுப்புகளுக்கும் இவர் ஒருவர் மட்டுமே ஆசிரியராகவும் இருந்து வருகிறார். 5 வகுப்புகளிலும் உள்ள 30 மாணவர்களையும் ஒரே அறையில் உட்கார வைத்து நடுவில் உட்கார்ந்து பாடம் நடத்தி வருகிறார். மீட்டிங் தொடர்பாக தொடக்க கல்வி அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தால், அன்று பள்ளிக்கு விடுமுறை விட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 5வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியராக இருப்பதால் மாணவர்களுக்கு புரியும் படியாக பாடத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

 இங்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் எனக்கோரி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேதரத்தினம், கல்விக் குழுத் தலைவர் தனபாலன் ஆகியோர் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் பலனில்லை. எனவே, இனியாவது உடனடியாக இப்பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் வேதரத்தினம் கூறுகையில், தமிழகத்தில் ஓராசிரியர்பள்ளிகளே இருக்காது என்று அரசு 2 வருடங்களுக்கு முன்பே அறிவித்திருந்தது. கிராமப்புறத்தில் பெரும்பாலும் குழந்தை களை ஆங்கில பள்ளியில் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் மத்தியில் எங்கள் ஊர் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்து படிக்க வைத்துள்ளோம். 

5 வகுப்புகளுக்கு ஒரே ஆசிரி யர் பாடம் நடத்துவது இய லாத காரியம். எனவே, உடன டியாக இப்பள்ளிக்கு மேலும் ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மாத கடைசியில் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

Comments

Popular posts from this blog