அரசுத் துறைகளில் 10,105 காலியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு: 

டி.என்.பி.எஸ்.சி. தகவல் தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள 10 ஆயிரத்து 105 காலிப் பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.இதில், 27 அரசுத் துறைகளில் 35 பதவிகளில் காலியாகவுள்ள 10 ஆயிரத்து 105 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படும். குரூப் 1 தேர்வு இனி மாநில குடிமை பணி தேர்வு என மாற்றப்பட்டுள்ளது. 

பத்தாண்டுக்குப் பிறகு தேர்வு முறை பாடத்திட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 1,500 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. குரூப் 2 தேர்வில் 1,500 பணியிடங்களும், குரூப் 4-ல் 2 ஆயிரத்து 716 பணியிடங்களும் காலியாக உள்ளன. 

இந்தப் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.மேலும், 2 ஆயிரத்து 300 மருத்துவர் பணியிடங்களும், 1,500 கால்நடை மருத்துவர் பணியிடங்களும் தேர்வு மூலம் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.முழுவிவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog