Posts

Showing posts from December 27, 2012
தகுதியானவர்கள் மட்டுமே முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம்  : பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் பேரில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறாதது கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,300 பேரின் தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஓரிரு நாள்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.   சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறவில்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு ஆகியவற்றின் மூலம் 18 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களும், 2,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ...