Posts

Showing posts from December 26, 2012
ஆசிரியர் பணிக்கு ஆணை பெற்றவர்கள் பணியில் சேர்ந்தார்களா? சென்னை, டிச.26: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்தனர் என்ற விவரத்தை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடந்தது. முதல் தாளில் 10621 பேரும், இரண்டாம் தாளில் 8722 பேரும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்தமாதம் சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 19000 பேருக்கு கடந்த 13ம் தேதி முதல்வர் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இம்மாதம் 17ம் தேதியே பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர்.  இந்நிலையில் சிலர் பணியில் சேர கால அவகாசம் கேட்டுள்ளனர். அதில் 2 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். அதனால் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளனர். 3 பேர் எம்.எட் தேர்வுக்கு தயாராகி வருவதால் மே மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளனர். இவர்கள் தவிர மற்றவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். பணி நியமனம்...
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது . உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும்,இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளன ர் . இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.  நெருக்கடி: அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றோர், பணியிலும் சேர்ந்துவிட்டனர். ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீ...