Posts

Showing posts from December 18, 2012
பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம் கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து"சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.  கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர்.  ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை,குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்
வேலை கிடைக்காத முதுகலை ஆசிரியர்கள் முற்றுகை : டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஓயவில்லை பரபரப்பு -அதெப்படி ஓயும் !!!!!! முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.  டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப் பட்டியலை, டி.ஆர்.பி.,வெளியிட்டதில் இருந்து, பல்வேறு பிரச்னைகளுடன், தினமும், 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில், ஒருசில சான்றிதழ்களைகொடுக்காததால், இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள், தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்றும், அதற்கான இடஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்காதவர்கள் என, பல்வேறு காரணங்களுடன், மனுக்கள் கையுமாக, பட்டதாரிகள் வருகின்றனர்.  இப்படி வருபவர்களை, முறையாக அழைத்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற, டி.ஆர்.பி
1200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு  முதுகலை ஆசிரியர் பணிக்கு காலியாக உள்ள 1200 இடங்கள் அடுத்த ஆண்டிற்குள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பி.,க்கு கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஜனவரியில் புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி தேர்வில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும். அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும். கடந்தஆகஸ்ட் மாதம் நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில்