ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நடைபெற உள்ள பட்டதாரி மற்றும் ஆரம்ப ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டைதமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் புறக்கணித்து உள்ளதோடு, திட்டமிட்டே இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாட வாரியான பணியிடங்களின் எண்ணிக்கையையும், மட்டுமே வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், மொத்தப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி வகுப்புவாரியாக பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாடவாரியாகஇடஒதுக்கீட்டு பகிர்வின் படியான பணியிடங்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டே வெளியிடாமல் மறைத்து வருகிறது. எந்த ஒரு அரசு பணி நியமனத்திலும் ‘இடஒதுக்கீடு’ என்பது உயிர்நாடியானதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் மூலம் வெற்றி பெற்றவர்களில் உயர் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுப்பிரிவு இடங்களில் எத்தனை பேர் இடம் பெறுகிறார்கள், வகுப்பு வாரியான இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், பாடவ...
Posts
Showing posts from December 15, 2012
- Get link
- X
- Other Apps
குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி தயவு செய்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!உங்களது கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத படி தகுதியானதாக இருக்கட்டும் !!! ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு எனஅமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை: அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றரை ஆண்டுகளுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்போது, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களை நியமித்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு யாரும் விரல் நீட்டி சுட்டிக் காட்டி குறை சொல்ல முடியாதபடி நடைபெற்ற தேர்வாகும். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 பேருக்கு பணியிடங்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் காக்கும் நல்ல ஆட்சியில் அறப்பணியை மேற்கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அமைச்சர் சிவபதி. மாவட்ட வாரிய அமைச்சர்கள்: தகுதி...
- Get link
- X
- Other Apps
6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர். தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நிய...