Posts

Showing posts from December 14, 2012
TET நியமன உத்தரவுகளை வழங்க தடை விதிக்க மனு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.  பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.  சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர்,தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.  கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெள...