Posts

Showing posts from December 12, 2012
வெற்றி பெற்றும் தகுதி இல்லை: ஆசிரியர் தற்கொலை முயற்சி- dinamalar டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலைவாய்ப்புக்கான தகுதி இல்லாததால், மனமுடைந்த பட்டதாரி ஆசிரியர், வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார்.   கடலூர் மாவட்டம், வடலூர், தோமையன் நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ், 46; பி.ஏ., பட்டப்படிப்பில், "தத்துவம்&' பாடத்தை முதன்மைப் பாடமாகவும், பி.எட்., படிப்பில் சமூக அறிவியலும் படித்துள்ளார். திட்டக்குடி அடுத்த, தனியார் பள்ளியில், கடந்த, 14 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், அக்டோபரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பிரிவு தேர்வில், 114 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.  பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழக அளவில், தமிழ், ஆங்கிலம், கணிதம், சமுக அறிவியல் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே, பணி வாய்ப்புகள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. சி.இ.ஓ., அலுவலகத்தில், கடந்த மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேலை வாய்ப்புக்கான தகுதியில்,தத்துவம் பாடம் இல்லை என்பதால்,"வேலை இல்லை" என அனுப்பப்பட்ட
2,308 முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : சென்னையில் இன்று ஆஜராக உத்தரவு ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது. பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து, சென்னைக்கு புறப்பட்டு வர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, 27ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதனை, 1.5 லட்சம் பேர் எழுதினர்.சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, இறுதி பட்டியல் தயாரான நேரத்தில், தமிழ்வழியில் படித்தவர்கள் பிரிவில், போதிய தேர்வாளர்கள் இல்லாதது, தாவரவியல் பாடத்திற்கு, இறுதி பட்டியலை வெளியிட, கோர்ட் தடை என, பல்வேறு சிக்கல்களால், இறுதி பட்டியல் வெளியாகவில்லை.  இந்நிலையில், நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் விழாவில், முதுகலை ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்க, தமிழக அரசு
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதிப் பட்டியல் வெளியீடு-Dinamani  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கான தேர்வுப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. பணி இடங்களுக்குத் தேர்வான 2308 ஆசிரியர்களின் பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பட்டியல் விவரங்களை www.trb.nic.inஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நாளையே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று சந்திக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.