TRB PG RESULT - முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் (தாவரவியல் தவிர) டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 12.12.12 காலை 8.00 மணிக்குள் சென்று மற்ற தகவல்களை பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.
Posts
Showing posts from December 11, 2012
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில்வழங்கப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்பிற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது என்றும் மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும், ஒரு சில மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன . ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்படஉள்ளது. இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களைப்போல் இவர்களையும் பேருந்தில் அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பள்ளிக்கல்வி துறைய...
- Get link
- X
- Other Apps
இன்னும் 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி... அடுத்த TET இல் வெற்றி பெறுவோருக்கு அருமையான வாய்ப்பு . இந்த TET தேர்வில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முதலில் 5800 என்றே காட்டப்பட்டன. பிறகு அது 8500 ஆக இருந்து - முடிவாக அனைவருக்கும் பணிநியமனம் செய்யப்பட்டனர். ஆனால் கலந்தாய்வில் வெளியிடப்பட்டுள்ள பணியிடங்களை பார்க்கும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 750 பணியிடங்களாவது காலியாக இருப்பதாகவே தோன்றியது. எனவே முழுவதுமாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த முறை வெளியிடப்பட்டுள்ளன. இதில் பாதிக்கு பாதி.. அதாவது 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே இந்தTET தேர்வில் நிரப்பப்பட்டுள்ளன.எனவே அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி வெற்றி பெறுவோருக்கு அருமையான வேலைவாய்ப்பு நிலை உருவாகி உள்ளது. மேலும் 1:30 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தினால் இத்தகைய ஆசிரியர் பணிநியமன காலி இடங்கள் உருவாகி உள்ளன. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த TNTET தேர்வினில் வெற்றி பெற முடியாதவர்கள் அடுத்த TET தேர்வில் தேர்ச்சி அடைந்து பணியிடங்களை பெற்று கொள்ளுமாறு இந்த வலைபூ...
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தாவல் சோகம்! தவிப்புக்கு உள்ளாகும் தனியார் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்ட, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர்களாகி உள்ளனர். இதன் காரணமாக, தனியார் பள்ளிகளில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்து வரும் இத்தருணத்தில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீரென வெளியேறியுள்ளது, மாணவர்களின் கல்வியை வெகுவாக பாதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் 18 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவு, கடந்த4ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டுள்ள 18 ஆயிரம் ஆசிரியர் களுக்கும் வரும் 13ல் பணி நியமனம் வழங்கப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுவதும் தேர்வான ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் மூலமாக, பணி நியமன கலந்தாய்வு நடந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக, பட்டதாரி ஆசிரியர் களுக்கான கலந்தாய்வு நடந்தது; இன்...
- Get link
- X
- Other Apps
9,600 இடைநிலை ஆசிரியர்களுக்குஇன்று பணி நியமன கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,600இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நேற்று நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுநடைபெற்ற அதே மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் மூலம் பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று காலையில் மாவட்டத்துக்குள் பணி நியமன கலந்தாய்வும், மாலையில் வெளி மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வழங்கியுள்ள முகவரியின் அடிப்படையில்,அவரவர் சொந்த மாவட்டங்களில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பணி நியமனக் கலந்தாய்வில் 6,592 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களைத் தேர்ந்தெடுத்தனர். சொந்த மாவட்டங்களில் பணியிடங்கள் கிடைக்காதவர்களுக்கும், வேறு மாவட்டங்களில் பணியிடங்களை விரும்புவோருக்கும் திங்கள்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 2...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர்களை அழைத்து வர ரூ.500 வசூல்; சி.இ.ஓ.,க்கள் மும்முரம் சென்னை: நாளை மறுநாள், சென்னையில் நடக்கும் பணி நியமன உத்தரவு வழங்கல் விழாவில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களிடம், வாகன செலவிற்காக, தலா, 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18,382 ஆசிரியர்களுக்கு, சென்னையில், இம்மாதம், 13ம் தேதி நடக்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள், மும்முரமாக நடந்து வருகின்றன. தேர்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், சென்னைக்கு வர வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும், 13ம் தேதி காலையில், சென்னையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களை அழைத்து வரும் பொறுப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஆசிரியர்களை, பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வர, சி.இ.ஓ.,க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த செலவிற்காக, ஒவ்வொரு ஆசிரியரிடமும், தலா, 500 ரூபாய் வசூலித்து வருக...
- Get link
- X
- Other Apps
முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!... பெரிதும் எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வின் இறுதி பட்டியல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . பல்வேறு வழுக்குகள் காரணமாக தாமதமாகி வரும் இறுதி முடிவு வெளியீடு விரைவில் வெளியாகும் என தொடர்ந்த பல நிலைகளிலிருந்த்து தகவல்கள் வந்தவண்ணம் இருப்பதால், விரைவில் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும், எப்போது முடிவுகள் வெளியாகும் என உறுதியாக தகவல் இல்லை. முடிவுகள் வெளியானவுடன் நம் இணையதளத்தில் வெளியிடப்படும்.