புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார். புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார். 15 ஆ...
Posts
Showing posts from December 8, 2012
- Get link
- X
- Other Apps
தொடக்கக்கல்வி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்பாக 08.12.2012-க்குள் விடுப்பட்ட பணிகள் முடிக்க அனைத்து CEO & DEEOகளுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 12 / இநேமுஉ / 2012-1, நாள்.07.12.2012 பதிவிறக்கம் செய்ய..............
- Get link
- X
- Other Apps
18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, 13ல் பணி நியமன உத்தரவு பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர். ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழ...
- Get link
- X
- Other Apps
TRB - TET மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம் வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது. TRB - TET மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும் பிற மாவட்டத்திற்கு நியமனம்வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும் ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலந்தாய்வு முற்பகல் 08.00 மணிக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.