Posts

Showing posts from December 6, 2012
இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம் நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 2010-2011- 1,743 2011-2012- 1,886+3,565 2012-2013- 3,378 TOTAL    -  10,557. ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள் உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.  இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்பட்டுள்ளதன் காரணம் என்ன? D.T.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1000 பேருக்கு B.Ed தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே இடைநிலை ஆசிரியராக இருந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவிஉயர்வினை பெற்றுள்ளனர். இலவச கட்டாய கல்விசட்டப்படி 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விழுக்காடு 1:30 ஆக மாற்றபட உள்ளது. இவற்றால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பட்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ்சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றொரு வாய்ப்பு   ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத 533 பேருக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகியவற்றின் மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 18,382 பேரின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது.  இந்த இறுதிப் பட்டியலுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:  ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நவம்பர் 6 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அனைத்து ஊடகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தும் மறுதேர்வில் வெற்றி பெற்ற நிறைய பேர் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மற்றுமொரு வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல் தாளில் வெற்றி பெற்றவர்களில் 449 பேரும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களில் 84 பேரு...