Posts
Showing posts from December 4, 2012
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் பட்டியல் இன்று வெளியாகும்? சென்னை, டிச.4:உயர் நீதிமன்ற உத்தர வின் பேரில் 2வது ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த அக்டோபர் 14ம் தேதி நடந்தது. இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் முதல்தாளும், 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேர் 2ம் தாளும் எழுதினர்.இதையடுத்து கீ&ஆன்சர், ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில் 400 ஆட்சேபணை மனுக்கள் வந்தன. அவற்றின் மீது வல்லுநர் குழு ஆய்வு செய்தது. இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வு கீ&ஆன்சரில் ஏற்பட்ட குறைகள் குறித்து சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.இதன் காரணமாக ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள் பட்டியல் தயாரிப்பதில் இழுபறிஏற்பட்டு வந்தது. ஆனால், ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை நியமிக்க, வெயிட்டேஜ் போடும் குழு கடந்த 20 நாளாக சான்று சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வெயிட்டேஜ் போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த பணி முடியும் தறுவாயில் உள்ளது.அதனால் இன்று மாலை அல்லது நாளை மாலை இறுதி பட்டியல் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறத...